Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்

In
Updated: 12:53 GMT, Apr 30, 2017 | Published: 12:53 GMT, Apr 30, 2017 |
0 Comments
1306
This post was written by : Shailu

கொய்யா பழத்தில் விட்டமின் பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கல்சியம், தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. இதர பழங்களை ஒப்பிடும்போது கொய்யாவில் விட்டமின் சி அதிகம் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு இக்கனி ஒரு வரப்பிரசாதமாகும்.

1.மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், அப்பிரச்னையில் இருந்து மீளலாம்.

2.கொய்யாப்பழத்தை நறுக்கி சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் வலுவடையும்.

3.இந்த பழம் செரிமான உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதனை உண்பதால் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுப்பெறும்.

4.இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

5.கொய்யா பழத்தில் உள்ள லைகோபைன்(Lycopene) மற்றும் கரோட்டினாய்டுகள்(Carotenoids) புற்றுநோய் கட்டிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டவை.

6.இப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.

7.கொய்யாப்பழத்தை தோல் நீக்கி சாப்பிடுவதை விட, தோலுடன் அப்படியே சாப்பிட வேண்டும், இது முகத்திற்கு பொலிவை தருவதுடன், தோல் வறட்சியையும் நீக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg