Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காங்கேசன்துறை கடற்பகுதியில் சட்டவிரோதமாக பிரவேசித்தவர்கள் கடற்படையினரால் கைது!

In இலங்கை
Published: 17:23 GMT, Apr 30, 2017 |
0 Comments
1209
icon_com
This post was written by : Ravivarman

சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த வெளிநாட்டவர்களை, காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கைக் கடற்படையினர்  கைதுசெய்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த 32 வெளிநாட்டுப் பிரஜைகளில் மியன்மார் பிரஜைகள் 30 பேரும், இரு இந்தியர்களும் உள்ளடங்குவதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

குறித்த படகு காங்கேசன்துறையிலிருந்து 12 கடல் மைல் தூரத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. சிறிய படகில் மிகவும் ஆபத்தான முறையில் இவர்கள் பயணித்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 9 சிறுவர்கள் காணப்படுவதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் இலங்கைக் கடற்பரப்பினூடாக வேறுநாடுகளுக்கு சட்டவிரோதமாகத் தப்பிச் செல்ல முயற்சித்திருக்கலாம் எனவும், இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg