Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மே தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள்

In இலங்கை
Updated: 08:33 GMT, May 1, 2017 | Published: 03:48 GMT, May 1, 2017 |
0 Comments
1372
This post was written by : Risha

மே தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாக முல்லைத்தீவில் கடந்த இரண்டு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 54ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவினர்களே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தொழிலாளர்களின் உரிமைகளை கோரும் இன்றைய தினத்தில் உழைக்கும் கணவனையும், பிள்ளைகளையும் இழந்த நாம் என்ன உரிமையை கோரவுள்ளோம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, உறவுகளை தொலைத்து ஏங்கிப் போயிருக்கும் உறவுகளுக்காகவும், மண்மீட்பிற்காக போராடிவரும் மக்களுக்காகவும் குரல் கொடுக்குமாறு தொழிலாளர் தினத்தை அனுஷ்டிக்கும் தரப்பினரிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg