Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல் தொடர்: இன்றைய தினம் இரண்டு போட்டிகள்

In கிாிக்கட்
Updated: 06:38 GMT, May 1, 2017 | Published: 05:50 GMT, May 1, 2017 |
0 Comments
1441
This post was written by : Elakkiya

நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.

தொடரின் 38 ஆவது போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது.

அதேபோன்று தொடரின் 39ஆவது போட்டியாக புனேயில் நடைபெறவுள்ள போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேற்படி நான்கு அணிகளையும் பொறுத்தவரையில், புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் மும்பை இந்தியன்ஸ் இரண்டாவது இடத்திலும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் 6 புள்ளிகளுடன் குஜராத் லயன்ஸ் ஆறாவது இடத்திலும் 5 புள்ளிகளுடன் பெங்களூர் ஏழாவது இடத்திலும் உள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg