Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள்?

In
Updated: 07:34 GMT, May 1, 2017 | Published: 07:21 GMT, May 1, 2017 |
0 Comments
1240
This post was written by : Sylviya

இங்கிலாந்தின் சஃபோல்க் (Suffolk) நகரில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குடியேற்றவாசிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வேளையில் ஒர்ஃபோர்ட் பகுதியை வந்தடைந்ததை தொடர்ந்து பிரித்தானிய எல்லைப் படை அதிகாரிகள் குறித்த பகுதிக்கு விரைந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகள் வந்திறங்கிய கப்பல் அதிவேகக் காற்றின் காரணமாக கடலில் பயணிப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதாக கடலோர காவற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் உக்ரைனிய பிரஜைகள் எனவும், உக்ரைனிய குடியேற்றவாசிகள் பொலிஸாரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை இது இரண்டாவது முறை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg