Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீநகர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பு குண்டுத் தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு

In இந்தியா
Published: 07:23 GMT, May 1, 2017 |
0 Comments
1226
This post was written by : Shailu
attack

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இனம் தெரியாத நபரொருவர் மேற்கொண்ட கையெறி குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஐவர் காயமடைந்துள்ளனர்.

ஸ்ரீநகர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர் பொதுமகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, காயமடைந்த ஐவரில் நான்கு பேர் பொலிஸார் என கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதோடு, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg