Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் சமூகம் திட்டமிடப்பட்டு போதைப்பொருள் பாவனையில் வீழ்த்தப்பட்டுள்ளது: சகாயம்

In இந்தியா
Updated: 09:02 GMT, May 1, 2017 | Published: 08:05 GMT, May 1, 2017 |
0 Comments
1346
This post was written by : Shailu

தமிழ் சமூகம் திட்டமிடப்பட்டே போதைப்பொருள் பாவனையில் வீழ்த்தப்பட்டுள்ளதாக இந்திய நிர்வாக சேவை அதிகாரி (IAS) சகாயம் தெரிவித்துள்ளார்.

வட. சென்னை புழல் பகுதியில் மக்கள் பாதை அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்கும் நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இளைஞர்கள் இந்தியாவின் எதிர்காலம். அவர்களால் இந்தியா வளர்ச்சி பாதையில் முன்னோக்கி செல்கின்றது என்று குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் எழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே போதைப் பொருள் பாவனையில் அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தமிழக இளைஞர்களை மீட்டெடுத்து அவர்களை  சிறந்த பாதையில் வழிநடத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg