Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியில் மே தினக் கொண்டாட்டம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது

In ஐரோப்பா
Updated: 09:54 GMT, May 1, 2017 | Published: 09:54 GMT, May 1, 2017 |
0 Comments
1338
This post was written by : Sylviya

மே தினத்தை முன்னிட்டு துருக்கியின் இஸ்தான்புலில் உள்ள டக்ஸிம் சதுக்கத்தினுள் நுழைய முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் இன்று (திங்கட்கிழமை) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் பலர் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை டக்ஸிம் சதுக்கத்தில் நடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த இஸ்தான்புல் நகர ஆளுநர், ஆர்ப்பாட்டத்தில் மோதல் ஏற்பட்டால் அதனை தடுக்கும் வகையில் சுமார் 30,000 பாதுகாப்பு படையினர் குறித்த பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் எனவும் குறித்த பகுதியில் பாதுகாப்பு அதிகரித்து காணப்பட்டதெனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1977ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மே தின கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட மோதலில், பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து டக்ஸிம் சதுக்கத்தில் மே தின கொண்டாட்டங்கள் நடத்தப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு மே தின கொண்டாட்டங்களுக்காக குறித்த சதுக்கம் திறந்து வைக்கப்பட்டது எனவும் பின்னர் 2013ஆம் ஆண்டு மீண்டும் மூடப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg