Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியின் விஜயம் மலையக வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்: இராதாகிருஷ்ணன்

In இலங்கை
Updated: 11:38 GMT, May 1, 2017 | Published: 11:35 GMT, May 1, 2017 |
0 Comments
1381
This post was written by : Risha

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் மலையக வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஒன்றிணைந்த மேதினக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், கடந்த ஆண்டு மே தினக் கூட்டத்தின்போது தொழிலாளர்கள், ஆசிரியர் உதவியாளர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் இடம்பெற்றிருந்தது.

ஆனால், தற்போது அந்நிலை மாறியுள்ளது. தேயிலை, இறப்பர் விலைகள் அதிகரித்துள்ளமையால் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை ஏற்படுத்த முடியும். அதேவேளை, ஆசிரியர் உதவியாளர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டணியை பலப்படுத்தி எதிர்வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் நாம் எமது தனித்துவத்தை எடுத்துக் காட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும்.

இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மலையகத்தில் புதிய வீடமைப்பு திட்டங்களுக்கான கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. இந்திய பிரதமரின் விஜயம் மலையக வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கின்றோர் என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தின ஊர்வலம் மற்றும் போதுக்கூட்டத்தில், கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன், அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துக் கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg