Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களின் வாக்குப்பலமே இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு வழியாகும்: மாவை.சேனாதிராஜா

In
Updated: 12:13 GMT, May 1, 2017 | Published: 12:13 GMT, May 1, 2017 |
0 Comments
1338
This post was written by : Ravivarman

தமிழ் மக்களின் வாக்குப்பலமே இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு வழியமைக்கும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மேதினக்கூட்டம் அம்பாறை, அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அரசாங்கத்தை மாற்றி புதிய அரசாங்கத்தினைக் கொண்டுவருவதில் அவதானமாக செயற்பட்டவர்கள் தமிழர்கள். எமது வாக்குப் பலத்தினால் ஒரு அரசாங்கத்தையே மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள் நாங்கள்.

அதனால்தான் இன்று மைத்திரிபால தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது. புதிய ஜனாதிபதி ஆட்சி அமைத்தபோது வடகிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்ற நிலங்கள் யாருடையதோ அது உரியவர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்து இருந்தார். அது இன்று படிப்படியாக நடைபெற்று வருகின்றது” என மாவை சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.

DSCN1784 DSCN1776

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg