Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

இரண்டு வாரத்துக்குள் அரசியல் தீா்வு தொடா்பில் தீா்க்கமான முடிவு: இரா.சம்பந்தன்

In
Published: 14:16 GMT, May 1, 2017 |
0 Comments
1295
This post was written by : Ravivarman
sampanthan1

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் அரசாங்கத்திடம் இருந்து நல்லதோர் முடிவினை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்து இருப்பதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக்கூட்டம், இன்று (திங்கட்கிழமை) ஆலையடிவேம்பு தர்மசங்கரி மைதானத்தில் நடைபெற்றபோதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த நாடு இங்கு வாழுகின்ற தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களுக்குரியதே தவிர தனிபட்ட ஒரு இனத்திற்கு உரித்துடையதல்ல தனிப்பட்ட ஒரு இனம் உரிமை கோரமுடியாது. இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு இனமும் சமத்துவமாகவும், சமாதானமாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படவேண்டும்.

இனிமேல் எமது மக்களுக்கு வழங்கப்படுகின்ற எந்தத்தீர்வாக இருந்தாலும் எமது மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வாக இருக்கவேண்டும். அப்போதுதான் நாம் ஏற்றுக்கொள்வோம். அந்த விடயத்தில் எமது கட்சி உறுதியாக இருந்து செயற்பட்டு வருகின்றது.

சரியான முறையில் அரசியல் சாசனம் மாற்றப்பட்டு, நியமான அரசியல் தீர்வு இறைமையின் அடிப்படையில் மக்களுக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதுடன், அவர்கள் சுதந்திரமாகவும் கௌரவமாக வாழக்கூடிய நிலை இந்நாட்டில் ஏற்பட வேண்டும்” என இரா.சம்மந்தன் மேலும் தெரிவித்தார்.

IMG_3537 IMG_3535 IMG_3523 IMG_3510