Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனவாதத்திற்கு துணைபோனவர்களே காலி முகத்திடலில் கூடியுள்ளனர்: விக்ரமபாகு

In இலங்கை
Updated: 15:14 GMT, May 1, 2017 | Published: 15:14 GMT, May 1, 2017 |
0 Comments
1188
This post was written by : Ravivarman

நாட்டில் மீண்டும் இனவாத ஆட்சியை ஏற்படுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டு வருவதற்கு அடையாளமாகவே காலி முகத்திடலில் ஒன்று கூடியுள்ளனர் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புக்கள் இணைந்து நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் இன்று (திங்கட்கிழமை) நடத்திய மேதின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் மீண்டும் ஜனநாயக விரோத ஆட்சியை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். அரசாங்கம் ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கை மந்தகதியில் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க , எக்னலிகொட போன்றவர்களின் கொலை மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் இன்னும் தீர்வொன்றை வழங்காமல் இருக்கின்றது.

குறிப்பாக சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்குதல் விடயம் தொடர்பாக அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என விக்ரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg