Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பென் ஸ்டோக்ஸின் அசத்தல் ஆட்டத்தால் குஜராத்தை வீழ்த்தியது புனே

In கிாிக்கட்
Updated: 04:55 GMT, May 2, 2017 | Published: 04:21 GMT, May 2, 2017 |
0 Comments
1578
This post was written by : Risha

புனேயில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 39ஆவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொண்ட ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி பென் ஸ்டோக்ஸின் அதிரடி சதத்துடன் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புனே முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதன்படி 162 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய புனே அணி, பென் ஸ்டோக்ஸின் அதிரடி சதத்துடன் 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள புனே அணி, நேற்றைய வெற்றியினூடாக 12 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் காணப்படுகிறது.

அதேவேளை, 10 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ள குஜராத் அணி, 6 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் காணப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg