Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோல்விகளால் துவண்டுபோயுள்ள டெல்லியை இன்று எதிர்கொள்கிறது ஹைதராபாத்

In கிாிக்கட்
Updated: 06:51 GMT, May 2, 2017 | Published: 05:57 GMT, May 2, 2017 |
0 Comments
1291
This post was written by : Risha

பத்தாவது ஐ.பி.எல். தொடரின் 40ஆவது போட்டியில், நடப்பு சம்பியனான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்திலுள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியை இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி டெல்லியில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திலும், டெல்லி 6 தோல்விகளுடன் இறுதி இடத்திலும் காணப்படுகின்றது.

டெல்லி அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா என்ற கேள்விக்குறியுடன் உள்ளது.

டெல்லி அணியுடனான கடந்த போட்டியில் ஹைதராபாத் அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அந்த வெற்றியை இன்றைய ஆட்டத்திலும் தொடர ஹைதராபாத் அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg