Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கணவாய் வறுவல்

In
Updated: 06:26 GMT, May 2, 2017 | Published: 06:26 GMT, May 2, 2017 |
0 Comments
1291
This post was written by : Elakkiya

தேவையான பொருட்கள்:
கணவாய் – கால் கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மா – 2 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்னவெங்காயம் தேவையான அளவு
பச்சை மிளகாய் – 6
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் – 1 (சாறு எடுக்கவும்)
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்

செய்முறை:
கணவாயை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். அதனை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கணவாய் துண்டுகளை 2 நிமிடம் இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

பிறிதொரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். பின்னர் அதனுள் வேகவைத்த கணவாயை சேர்த்து லேசாக வதக்கி சிறிது உப்பு மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து இறக்கவும். பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg