Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனிய பத்திரிகையில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது: பிரதமர் மே

In
Updated: 07:16 GMT, May 2, 2017 | Published: 07:16 GMT, May 2, 2017 |
0 Comments
1320
This post was written by : Sylviya

பிரித்தானிய பிரதமர் மே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் ஜேன் கிளாட் ஜங்கர் ஆகியோருக்கு இடையில் பிரெக்சிற் தொடர்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தியளிக்கும் வகையில் இருக்கவில்லை என, ஜேர்மனிய பத்திரிகை ஒன்றில் வெளியானதை தொடர்ந்து அது முற்றிலும் தவறான கருத்து என பிரதமர் மே தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கை ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) ஈடுபட்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மே, “ஐரோப்பிய ஒன்றிய ஆணையருடனான பேச்சுவார்த்தையின் பின்னர், வெளியான கருத்துக்களை உற்று நோக்கினால் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றன என்பது புலனாகும். ஜேர்மனிய பத்திரிகையில் இது தொடர்பில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது” என தெரிவித்தார்.

அத்துடன், பிரெக்சிற் விவகாரம் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் கடினமானதாக அமையலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க சிறந்த தலைமைத்துவம் தேவை என்பதும் அதனால் முன்கூட்டிய பொதுத் தேர்தல் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்பட வேண்டும் என்பதும் பிரதமர் மேயின் வாதமாக உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg