Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன்ஸ் லீக்: ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி வீரர்கள் வெளியேறினர்

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:14 GMT, May 2, 2017 | Published: 07:08 GMT, May 2, 2017 |
0 Comments
1350
This post was written by : Risha

ஐரோப்பிய கால்பந்து கழக அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், அட்லேடிகோ மாட்ரிட் அணிக்கெதிரான அரையிறுதி போட்டியிலிருந்து ரியல் மாட்ரிட் அணியின் முன்னணி வீரர்கள் வெளியேறியுள்ளனர்.

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தினால் நடத்தப்படும் ஐரோப்பிய கால்பந்து கழக அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் அட்லேடிகோ மட்ரிக் மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

அரையிறுதி போட்டிக்கான ரியல் மாட்ரிட் அணிக்கான வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கெப்லர் லாவ்ரன் லிமா ஃபெரீரா மற்றும் கரேத் பேல் ஆகியோர் உபாதை காரணமாக பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பியன்ஸ் லீக் தொடரில் ரியல் மாட்ரிட் அணி இதுவரை இரண்டு முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. அப்போட்டிகளில் அணியின் வெற்றிக்கு குறித்த இரு வீரர்களும் பெரும் பங்காற்றியிருந்தனர். இந்நிலையில், அவர்கள் தற்போது உபாதைக்கு உள்ளாகியுள்ளமையானது அணிக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg