Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணியை வழிநடத்த தோனியின் அர்ப்பணிப்பு அளப்பரியது: ஸ்மித்

In கிாிக்கட்
Updated: 07:47 GMT, May 2, 2017 | Published: 07:33 GMT, May 2, 2017 |
0 Comments
1572
This post was written by : Risha

அணியை திறம்பட வழிநடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனியின் அர்ப்பணிப்பு அளப்பரியது என ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

முக்கியமான தருணங்களில் தோனியின் அறிவுரைகள் எவ்வாறு தனக்கு உதவியது என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “அணிக்காக தோனி பெரும் அர்ப்பணிப்பு செய்துள்ளார். அதன்படி, அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல தொடர்ந்தும் அவர் உதவிசெய்வார் என எதிர்பார்க்கிறேன்.

ஐ.பி.எல். போட்டிகளின் முடிவில் தோனி மீண்டும் பழைய உத்வேகத்துடன் விளையாடுவார் என நினைக்கிறேன். அதேவேளை, தோனியுடனான எஞ்சிய போட்டிகளில் விளையாட மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறேன்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg