Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹங்கேரியில் பேரணி

In ஐரோப்பா
Updated: 08:45 GMT, May 2, 2017 | Published: 07:57 GMT, May 2, 2017 |
0 Comments
1252
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தெரிவித்து ஹங்கேரித் தலைநகர் புடபெஸ்டில் மாபெரும் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட குறித்த பேரணியில் ஆயிரக்கணக்கான ஹங்கேரி மக்கள் கலந்துகொண்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, பிரதமர் விக்டர் ஓர்பானின் தலைமையின் கீழ் ஹங்கேரியின் மீதான ரஷ்ய ஆதிக்கம் குறித்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஹங்கேரியில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இப் பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஹங்கேரியில் ரஷ்யாவினால் ஊக்குவிக்கப்பட்ட விடயங்களுக்கு விக்டர் ஓர்பான் முன்னுரிமை அளித்து வருவதோடு, ரஷ்யாவின் அரசியலமைப்பை முன்னுதாரணமாகக் கொண்டு ஹங்கேரியும் மாற வேண்டும் என தெரிவித்திருந்தமை ஹங்கேரியர்கள் பலரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg