Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி வேட்பாளர் மெரின் லி பென்னிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

In ஐரோப்பா
Updated: 08:13 GMT, May 2, 2017 | Published: 08:13 GMT, May 2, 2017 |
0 Comments
1292
This post was written by : Sylviya

பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் மெரின் லி பென்னிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குடியரசு சதுக்கத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில், பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் குடியேற்றம் ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவிக்கும் தரப்பினரே மெரின் லி பென்னிற்கு எதிரான குறித்த ஆர்ப்பாட்டத்தில் மும்முரமாக பங்கேற்றிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர், “மெரின் லி பென் எம்மை பிரிப்பதிலேயே ஆர்வம் செலுத்துகின்றார். அத்தோடு குடியேற்றவாசிகள் தொடர்பான அவரது கருத்துக்களும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. அனைத்து இன மக்களும் பாகுபாடின்றி வாழும் ஒரு நாடே பிரான்ஸ். அதை மாற்றுவதற்கு நாம் இடமளியோம். மெரின், பிரான்ஸின் ஜனாதிபதியாக வரக் கூடாது” என தெரிவித்தார்.

சுமார் 30,000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாக பிரான்ஸ் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg