Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவ வீரர்களின் உடல்களை சிதைத்துள்ள பாகிஸ்தானின் செயலுக்கு அருண் ஜெட்லி கண்டனம்

In இந்தியா
Updated: 08:08 GMT, May 2, 2017 | Published: 08:08 GMT, May 2, 2017 |
0 Comments
1292
This post was written by : Shailu

இந்திய இராணுவ வீரர்களின் உடல்களை சிதைத்துள்ள பாகிஸ்தான் இராணுவத்தினரின் செயற்பாட்டிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், வீரர்களின் சடலங்கள் சிதைக்கப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தானின் இந்த செயற்பாட்டை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தாக்குதல்கள், போர்க் காலத்தில்கூட நடைபெற்றது இல்லை. இத்தாக்குதலானது கண்டிக்கத்தக்க மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும் என்று கூறியுள்ளார்.

அத்தோடு இந்திய வீரர்களின் உயிர்த் தியாகத்தை இந்தியா வீண்போக விடாது என்ற அவர், பாகிஸ்தான் படையினரின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு இந்திய பாதுகாப்புப் படை தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) பாகிஸ்தான் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் 2 இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் சிதைத்து மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு இந்தியாவின் முக்கிய தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg