Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராமானுஜரின் 1000-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தபால் தலையை வெளியிட்டார் மோடி

In இந்தியா
Updated: 10:26 GMT, May 2, 2017 | Published: 09:45 GMT, May 2, 2017 |
0 Comments
1126
This post was written by : Shailu

ஸ்ரீமத் இராமானுஜரின் 1000-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவம் பொறித்த தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

இராமானுஜரின் 1000-வது தினத்தை முன்னிட்டு டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு இத் தபால் தலையை வெளியிட்டார்.  அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்-

“சமூகம், மதம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய வேதாந்தமே இராமானுஜரின் வாழ்க்கை தத்துவம் ஆகும். இறைவனின் பக்தர்கள் அனைவரும் சமம் என உணர்த்திய அவர், சாதி பாகுபாடு மற்றும் அதிகார அடக்குமுறை கொண்ட சமூகத்தை தனது வாழ்க்கை முறை மற்றும் போதனைகள் மூலம் எதிர்த்தார்.

ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்த இராமானுஜர், அவர்களுக்கு எதிரான கோட்பாடுகளையும் உடைத்தெறிந்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும், அவர்கள் வாழ்வில் சீர்திருத்தங்களையும் கொண்டுவர பாடுபட்டமையால், அவரை அனைத்து சமூகமும் கடவுளாக பூஜிக்க ஆரம்பித்தது.

எனவே மகானாக போற்றப்படும் அவரின் நினைவு தபால் தலையை வெளியிடும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மத்திய அமைச்சர்களான வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், அனந்த குமார், பொன்.இராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  எஸ்.இராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg