Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகுபலியால் வாழ்க்கையே மாறிய காலகேயன்!

In சினிமா
Updated: 12:04 GMT, May 2, 2017 | Published: 11:35 GMT, May 2, 2017 |
0 Comments
1283
This post was written by : Rajinthan

‘பாகுபலி’ இன்று அனைவரின் நாவிலும் உச்சரிக்கும் முக்கிய தாரக மந்திரமாக மாறிவிட்டது. பாகுபலி 1,2 என இரு படங்களை கொடுத்து அசத்திவிட்டார் இயக்குநர் ராஜமௌலி. இப் படத்தில் பிரபாஸ், ரானா, சத்யராஜ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பலர் நடித்திருந்தார்கள்.

பாகுபலியில் பலரையும் பிரமிக்க வைத்த கதாபாத்திரமாக அமைந்த பாத்திரம் காலகேயா எனும் பாத்திரம். பெரும் படை கொண்ட எதிரிகளின் கூட்ட தலைவனாக காலகேயன் விளங்கினார். பாகுபலியில் இக் கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபாகர்.

திறமையான நடிகரான இவருக்கு ஆரம்ப காலகட்டங்களில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின் மனம் வெறுத்த இவர் தற்கொலை வரை சென்று எப்படியோ தப்பித்து வந்துள்ளார். பின்னர் தொலைத் தொடர்பு நிலையத்தில் வேலை செய்துவந்தார்.

ஒரு முறை ராஜஸ்தானில் மகதீரா படத்திற்கான படப்பிடிப்பு நடந்த போது இவரது நடிப்பை பார்த்த ராஜமௌலி அவரை கூப்பிட்டு பாகுபலி படத்தில் நடிப்பதற்கு வருமாறு கூறியுள்ளார்.

இவ்பாவாறு, பாகுபலியால் வாழ்க்கையே மாறிய பிரபாகருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg