Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘வேலைக்காரன்’படத்தில் இணையும் முக்கிய பிரபலம்

In சினிமா
Published: 12:41 GMT, May 2, 2017 |
0 Comments
1269
This post was written by : Shailu
Mahesh Manjrekar in Arrambam Movie Stills

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘வேலைக்காரன்’.

சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் வில்லனாக மலையாள நடிகரான பகத் பாஸில் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் ‘வேலைக்காரன்’ படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், பகத் பாஸில் தந்தையாக நடிகர் மகேஷ் மன்ஜரேக்கர் நடிக்க உள்ளதாக படக்குழுவுக்கு வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இவர் அஜித் நடிப்பில் வெளியான ‘ஆரம்பம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மலேசியாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்வரும் ஜுன் 5-ஆம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், படத்தினை எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg