Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:44 GMT, May 2, 2017 | Published: 16:44 GMT, May 2, 2017 |
0 Comments
1175
This post was written by : Sivaguru Siva

பிரான்ஸ் அரச தலைவர் தேர்தலின் இறுதிச்சுற்று வாக்களிப்பு எதிர்வரும் ஞாயிறன்று இடம்பெறவுள்ள நிலையில் முன்னணி வேட்பாளர் இமானுவேல் மக்ரோனுக்குரிய ஆதரவு நிலை குறைவடைந்துள்ளதை புதிய கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன

இந்த நிலையில் முன்னாள் வேட்பாளர் பிரான்சுவா பியோனின் உரையை திருடியதாக மரீன் லெ பென் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முதற்சுற்று வாக்கெடுப்பில் பிரான்சுவா பியோனின தோல்வியடைந்தநிலையில் மரீன் லெ பென் அவரது கருத்துக்களை தனது இறுதிச்சுற்று பரப்புரையில் பயன்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.

_95854927_e8c9a66a-aafe-4834-9388-fb632048a652

ஐரோப்பிய ஆணைக்குழுவுடன் செய்திக்குறிப்புச் சண்டையில் ஈடுபடும் நோக்கமில்லையென பிரித்தானிய அரச வட்டாரங்கள் அறிவித்துள்ளன.

கடந்த வாரம் ஐரோப்பிய ஆணைக்குழுத்தலைவர் ஜேக் குளுட் ஜங்கருக்கு பிரித்தானிய தலைமையமைச்சர் திரேசாமே தனது வதிவிடத்தில் இராப்போசன விருந்;தை வழங்கிய போது இருவருக்கும் இடையில் கருத்தியல் மோல் இடம்பெற்றதாக ஜேர்மனிய ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் ஐரோப்பிய ஆணைக்குழு சார்ந்த செய்திகளை மையப்படுத்தி வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடும் நோக்கமில்லையென பிரித்தானிய அரச வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

54 வருடங்களாக ஒரே மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்ற பிரித்தானியாவின் முன்னாள் படைஉறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

1962 ஆம் ஆண்டில் தனது கால் ஒன்று முறிவடைந்த நிலையில் 21 வயதான ஜேம்ஸ் மொரிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் வீடு திரும்பவி;ல்லை.

முறிவடைந்த காலுக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டவேளை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர்; இயங்க முடியாதவரானர்.

இதனையடுத்து கடந்த 54 வருடங்களாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜேம்ஸ் மொரிஸ்  தனது 75 வயதில் கடந்த மாத இறுதியில் மரணமடைந்தார்_95868031_caters_longest_nhs_patient_dies_06

பாகிஸ்தானிய படையினரால் காஸ்மீர்பிராந்தியத்தில் கொல்லபட்ட இரண்டு இந்தியப்படையின் உடலங்களை பாகிஸ்தானியப்படையினர் சிதைத்துள்ளதான செய்தி இந்திய சமூக ஊடகங்களில் பெரும் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

காஸ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைப்பிரிவுகள் நேற்று நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியப்படையினரின் உடல்களை சிதைத்தமை ஒரு ராணுவத்தன்மையற்ற செயல் என இந்தியா கண்டித்திருந்தது.ஆயினும் பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது._95864121_40c9d0a8-bf68-48b4-adf0-8e472f19ceb3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg