Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசை அமைச்சர்கள் விமர்சிக்கக் கூடாது: முதல்வர் பழனிச்சாமி!

In இந்தியா
Updated: 04:49 GMT, May 3, 2017 | Published: 04:33 GMT, May 3, 2017 |
0 Comments
1168
This post was written by : Shailu

மத்திய அரசை விமர்சிக்கக் கூடாது என்று அமைச்சர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க கட்சியின் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் பல்வேறு நல திட்டங்கள் குறித்த ஆலோசிக்கப்பட்டதோடு,  அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது எடுத்துக்கொள்ள வேண்டிய அம்சங்கள் குறித்தும், நிலப்பதிவின் வழிகாட்டு மதிப்பில் மாற்றம் செய்வது மற்றும் 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயற்பாடு ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) தொடர்பான திட்டம் அமுலுக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் குறித்த திட்டத்தை அமுல்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg