Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆந்திரா – தெலுங்கானா மாநில ஆளுநரின் பதவிக்காலம் நீடிப்பு

In இந்தியா
Updated: 06:08 GMT, May 3, 2017 | Published: 06:03 GMT, May 3, 2017 |
0 Comments
1171
This post was written by : Shailu

ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மனின் பதவிக்காலத்தை நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆளுநரின் பதவிக்காலம் நேற்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைந்துள்ள நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ஆளுநர் நரசிம்மனுக்கு தற்போது பா.ஜ.க. அரசில் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2007ஆம் ஆண்டு சத்தீஷ்கர் மாநில ஆளுநராக செயற்பட்ட நரசிம்மன், ஆந்திரா மாநிலம் பிரிந்து செல்வதற்கு முன்பு கடந்த 2010ஆம் ஆண்டு அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

ஆந்திராவை விட்டு பிரிந்த தெலுங்கானா தனி மாநிலமாக உதயமான நிலையில், இரு மாநிலங்களுக்கும் நரசிம்மனே ஆளுநராக பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg