Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கருத்து வேறுபாடுகளை மறந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும்: ஜேர்மனிய அதிபர்

In ஐரோப்பா
Updated: 07:08 GMT, May 3, 2017 | Published: 07:08 GMT, May 3, 2017 |
0 Comments
1370
This post was written by : Sylviya

ஜேர்மனி மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படும் போதும் அதை புறந்தள்ளி விட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என ஜேர்மனிய அதிபர் அங்கேலா மெர்க்கெல் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் சோச்சியில் அமைந்துள்ள பிளெக் சீ சுற்றுலா விடுதியில் (Black Sea resort) நேற்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதன் பின்னர் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிரியா, உக்ரைன் மற்றும் ஏனைய நாடுகளின் தேர்தல்களில் ரஷ்யாவின் பங்களிப்பு தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையின் போது அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மெர்க்கெல் கருத்து தெரிவிக்கையில், “அதிபர் எனும் வகையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி புரியும் வகையில் சமாதான உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவது முக்கியம் என நான் கருதுகின்றேன்” என தெரிவித்தார்.

இதேவேளை, இரு தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும் அவர்கள் ஒருவரை ஒருவர் முகங்கொடுத்து பார்க்கவில்லை எனவும் அவர்களது கருத்துக்கள் திடமாக காணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் கிரைமீய தீபகற்பத்தை ரஷ்யா இணைத்துக்கொண்டதன் பின்னர், ரஷ்யாவுக்கு மெர்க்கெல் விஜயம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg