Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரமித்தவின் அமைச்சர் பதவி திலினவிற்கு!

In இலங்கை
Updated: 09:04 GMT, May 3, 2017 | Published: 07:09 GMT, May 3, 2017 |
0 Comments
1375
This post was written by : Risha

தனது தந்தையின் அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்திய மாகாணசபை அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவரது சகோதரர் திலின பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய பிரமித்தவின் வசமிருந்த மத்திய மாகாண விளையாட்டு, கைத்தொழில், இளைஞர் விவகாரம், மகளிர் விவகாரம், விவசாயம் உள்ளிட்ட அமைச்சுக்கள் திலிணவிற்கு கைமாறியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அதிரடி மாற்றங்களை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சுதந்திர கட்சியின் தம்புள்ளை தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளராகவிருந்த மஹிந்த அணி உறுப்பினரான ஜனக்க பண்டார தென்னக்கோனின் பதவி பறிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரமித்த தனது அமைச்சுப் பதவியை   ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg