Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அகத்திக்கீரை குழம்பு

In
Updated: 08:15 GMT, May 3, 2017 | Published: 07:39 GMT, May 3, 2017 |
0 Comments
1455
This post was written by : Elakkiya

தேவையான பொருட்கள் :

அகத்திக்கீரை – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – தேவையான அளவு
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
காய்ந்த மிளகாய் – ஒன்று
தக்காளி – ஒன்று
அரிசி களைந்த நீர் – ஒரு கப்
சம்பார் பொடி – தேவையான அளவு
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அகத்திக்கீரையை நீரில் அலசி நீரை வடியவிட்ட பின்னர் சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயத்தை வட்டமாகவும், தக்காளியைப் சிறிதாகவும் வெட்டி வைக்கவும். பாசிப்பருப்பை வேகவைத்து கொள்ளவும்.  தேங்காய்த் துருவலில் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து பால் எடுக்கவும்.

பின்னர் அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பின்னர் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதங்கும்போது கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். அதில் அரிசி களைந்த நீரை சேர்த்துக் கீரையை வேகவிடவும்.  கீரை வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும்.

அகத்திக்கீரைக் குழம்பு தயார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg