Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். லீக் போட்டிகளில் சஹீர் கான் விளையாடுவது சந்தேகம்!

In கிாிக்கட்
Updated: 10:02 GMT, May 3, 2017 | Published: 08:53 GMT, May 3, 2017 |
0 Comments
1489
This post was written by : Anojkiyan

உபாதை காரணமாக அவதியுறும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் சஹீர் கான், எஞ்சியுள்ள லீக் போட்டிகளில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள நிலையில், சஹீர் கானின் இழப்பு அணிக்கு கடும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், காலில் தசைநார் கிழிந்து காயம் அடைந்த சஹீர் கான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய (செவ்வாய்க்கிழமை) போட்டியில் களமிறங்கவில்லை.

இதனால் கருண் நாயரே அணியை வழிநடத்தினார். இந்நிலையில் சஹீர் கானுக்கு காயம் முழுவதுமாக குணமடையாத நிலையில், உடல்தகுதி இல்லாததால் அவர் எஞ்சியுள்ள லீக் போட்டிகளில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

நேற்றைய போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg