Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பொருளாதாரத்தின் பக்கம் திசைதிருப்ப முயற்சி?

In
Updated: 10:00 GMT, May 3, 2017 | Published: 08:16 GMT, May 3, 2017 |
0 Comments
1405
This post was written by : Sylviya

தொழிற்கட்சியின் வரி மற்றும் செலவீனங்கள் தொடர்பான திட்டங்களை காரணங்காட்டி, கன்சர்வேட்டிவ் கட்சியானது தமது பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பொருளாதாரத்தின் பக்கம் திசைதிருப்ப முயற்சிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்கட்சி தனது செலவீனத் திட்டங்கள் தொடர்பில் சுமார் 45 பில்லியன்களை ஒதுக்கியுள்ளது என டோரிக்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த செலவீனத் தொகையானது ஒட்டு மொத்த செலவுகளை உள்ளடக்கியுள்ளது எனவும், டோரிக்களால் கணிப்பிடப்பட்டுள்ள செலவீனத் தொகையில் தவறுகள் உள்ளன எனவும், அவை பட்டியலிட்டு காட்டுவதற்குக்கூட மதிப்பற்றவை எனவும் தொழிற்கட்சி கூறியுள்ளது.

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலின் பொருட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெவ்வேறான கருத்துக்களை கொண்டுள்ளனர். அத்துடன், பொதுத் தேர்தல் குறித்த பிரசார நடவடிக்கைகள் பிரித்தானியாவில் சூடுபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg