Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை: வோர்னர்

In கிாிக்கட்
Updated: 10:08 GMT, May 3, 2017 | Published: 09:23 GMT, May 3, 2017 |
0 Comments
1254
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல். தொடரின் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கெதிரான போட்டியில், பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய (செவ்வாய்க்கிழமை) போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியிடம் வீழ்ந்தது. இப்போட்டியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே வோர்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“186 ஓட்டங்கள் என்பது கடினமான இலக்குதான். ஆனால் டெல்லி அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். அந்த அணியின் துடுப்பாட்டத்தை எதிர்பார்க்கவில்லை. பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. இந்த தோல்வி சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg