Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செம்பருத்திப்பூவின் மருத்துவக் குணங்கள்

In
Updated: 10:11 GMT, May 3, 2017 | Published: 09:27 GMT, May 3, 2017 |
0 Comments
1181
This post was written by : Elakkiya

கோபத்தினால் உடலின் வெப்பம் அதிகரித்து இரத்த அழுத்தம் கூடி, நாளமில்லா சுரப்பிகளில் ஒருவித பதற்றம் ஏற்படுகின்றது. இதனால் ஓமோன்களின் செயற்பாடுகள் சீர்குலைந்து நோய்கள் உண்டாகின்றன.

இத்தகைய கோபத்தினை கட்டுப்படுத்துவதற்கு செம்பருத்திப் பூ முக்கிய பங்கு வகிக்கின்றது. செம்பருத்திப் பூவிற்கு இருதய நோய்களை தடுக்கும் சக்தியும் உள்ளது.

செம்பருத்தி செடிகளின் பூக்களிலுள்ள காசிபால் எனும் சத்து கோபத்தை அதிகப்படுத்தும் ஓமோன்களை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்துவடன் அதிக வெப்பம் மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் நோய்களை தடுக்கின்றது.

செம்பருத்திப் பூக்களின் பூவிதழ்களில் அரை கைப்பிடி எடுத்து சீரகம் ஒரு கிராம், நெல்லிவற்றல் ஒரு கிராம் என இரண்டு லிட்டர் நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரை அருந்தினால் அதிக உடல் உஷ்ணம் தணியும்.

செம்பருத்தி பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வரலாம். இதனால் தலைச்சூடு தணியும்.

கல்லீரல், இருதயம், சிறு நீரக நோய்களுக்கு செம்பருத்திப் பூக்களை அரை லீட்டர் தண்ணீரில் சுண்டக் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டால் காய்ச்சல், நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் என்பன குணமாகும்.

பூக்களைச் சேகரித்து அரைத்து பசும் பாலில் கலக்கி காலை, மாலை ஆகாரத்துக்கு முன் மூன்று தினங்கள் சாப்பிட்டால் இரத்தச்சோகை நீங்கும். இதய பலவீனம் நீங்கும். மூளையின் செயற்பாடுகள் பலம் பெறும். இரத்தவிருத்தி உண்டாகும்.

செம்பருத்திப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து, 250 மில்லிலீற்றர் தண்ணீரில் நன்றாக ஊறியபின் அந்த நீரைக் குடித்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். நீரடைப்பு, நீர் எரிச்சல் என்பன உடனே நிவர்த்தியாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg