Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டென்மார்க்கிலிருந்து சுவீடன் செல்பவர்கள் மீதான சோதனை நடவடிக்கைகள் நிறைவு

In ஐரோப்பா
Updated: 10:16 GMT, May 3, 2017 | Published: 10:16 GMT, May 3, 2017 |
0 Comments
1258
This post was written by : Sylviya

டென்மார்க்கிலிருந்து வருபவர்களை சோதனை நடவடிக்கைகக்கு உட்படுத்த வேண்டும் என சுவீடனில் விடுக்கப்பட்டிருந்த உத்தரவு மீளப்பெறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகளின் வருகை அதிகரித்து காணப்பட்ட காலப்பகுதியிலேயே மேற்குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கிலிருந்து புகையிரதம், படகுகள் மற்றும் பேரூந்துகள் மூலம் சுவீடனை சென்றடையும் மக்கள் மீது நடத்தப்படும் சோதனை நடவடிக்கையை நிறுத்துவதன் மூலம், சுவீடன் எல்லையூடாக பயணிக்கும் மக்களுக்கு ஏற்படும் காலதாமதத்தை இல்லாதொழிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சுவீடன் எல்லை ஊடாக வருவோர் மீது மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 160,000 குடியேற்றவாசிகள் கடந்த 2015ஆம் ஆண்டு சுவீடனைச் சென்றடைந்ததை தொடர்ந்து, அங்கு எல்லைக்கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg