Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல்

In இந்தியா
Updated: 04:16 GMT, May 4, 2017 | Published: 04:16 GMT, May 4, 2017 |
0 Comments
1206
This post was written by : Shailu

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனு நேற்று (புதன்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு அம்மனுவில், வழக்கில் இருந்து தங்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் என அவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவர் மீதும் கர்நாடக சிறப்பு நீதிமன்ற விதித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg