Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரலாற்று சிறப்பு மிக்க கேதார்நாத் இந்துக் கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 05:32 GMT, May 4, 2017 | Published: 05:32 GMT, May 4, 2017 |
0 Comments
1490
This post was written by : Shailu

இந்தியாவின் வடக்கு கேதார்நாத் நகரில் அமைந்துள்ள வரலாற்று பழமைமிக்க இந்துக் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி மக்களின் வழிபாட்டுக்காக திறந்துவைத்துள்ளார்.

பனிப் பொழிவு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக பூட்டிவைக்கப்பட்டிருந்த கேதார்நாத் இந்து கோயில் நேற்று (புதன்கிழமை) திறக்கப்பட்டுள்ளது.

இதற்காக கேதார்நாத் நகரத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு ஆலயக் குருக்கள் மற்றும் இலட்சக்கணக்கான பக்தர்கள் அமோக வரவேற்பளித்திருந்த நிலையில், அவர்  ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளிலும்  கலந்து கொண்டார்.

ஆலய நகரமாக விளங்கும் கேதார்நாத் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக 6000 பேர் உயிரிழந்திருந்தனர்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் இந்திய விமானப் படையினர் ஈடுபட்டு பக்தர்களையும் பொதுமக்களையும் மீட்கும் பணியில் ஈடுபடுபட்டிருந்தனர். அத்துடன் மக்களுக்கான உலர்உணவுப் பொருட்களும் பெருமளவில் வழங்கப்பட்டிருந்தன.

அந்தவகையில் கேதார்நாத் இந்துக் கோயில் மட்டும்  மக்களின் ஞாபகார்த்தமாக மீள்கட்டியமைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg