Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மணிப்பூர் மாநில ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் திகதி அறிவிப்பு

In இந்தியா
Updated: 06:03 GMT, May 4, 2017 | Published: 05:57 GMT, May 4, 2017 |
0 Comments
1224
This post was written by : Shailu

மணிப்பூர் மாநில ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவு வருகின்றது.

இதன்படி ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தலானது எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ஹாஜி அப்துல் சலீமின் பதவிக்காலம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அவர் கடந்த பிப்ரவரி மாதம் காலமானார். இதனையடுத்து குறித்த பதவிக்கான இடம் வெற்றிடமாக காணப்படுகின்றது.

மணிப்பூர் மாநிலத்தில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைத்தது.

அந்தவகையில் தன்னுடைய முதல் பணியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் சேர்த்துக் கொண்ட பா.ஜ.க, ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனையும் கைப்பற்ற  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg