Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேன்முறையீடு செய்தால் நாடாளுமன்ற உறுப்பினராக கீதா நீடிக்கலாம்!

In இலங்கை
Updated: 06:23 GMT, May 4, 2017 | Published: 06:21 GMT, May 4, 2017 |
0 Comments
1353
This post was written by : Varshini

இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாதென வழங்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கீதா குமாரசிங்க உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வாராயின், தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிக்கலாம் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்வின்போது இவ்வாறு குறிப்பிட்ட சபாநாயகர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலும் பிரஜாவுரிமை கொண்டுள்ள கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் தொடர முடியாதென நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டிற்காக, கீதா குமாரசிங்கவிற்கு 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg