Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மந்தநிலையில் நகரும் அமெரிக்க பொருளாதாரம்

In வணிகம்
Updated: 06:26 GMT, May 4, 2017 | Published: 06:25 GMT, May 4, 2017 |
0 Comments
1141
This post was written by : Elakkiya

அமெரிக்க பொருளாதாரத்தில் தற்போது மந்தமான நிலையே காணப்படுகின்றது. எனினும் இந்த மந்தநிலையானது தற்காலிகமானது என அமெரிக்க மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நடப்பாண்டின் முதல்காலாண்டு பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 0.7 சதவீதமாக வளர்ச்சியடைந்தது. எனினும் இந்த வளர்ச்சி வீதமானது 2014 ஆம் ஆண்டின் முதல்காலாண்டு பகுதியிலிருந்து குறைந்த வளர்ச்சியையே காண்பிக்கின்றது.

எனினும் மேற்படி வளர்ச்சி வீதமானது மீண்டும் அதிகரிக்கும் என அமெரிக்க மத்திய வங்கி எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் முக்கிய வட்டி விகிதத்தை 0.75 சதவீதத்திலிருந்து 1 சதவீதத்திற்று இடையில் வைத்திருப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

கடந்த சதாப்தத்தில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மூன்று முறை அதிகரித்திருந்தது. கடந்த மார்ச் மாதம் இறுதியாக வட்டி விகிதங்களை அதிகரித்திந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg