Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி தேர்தலில் ஓ.பி.எஸ் அணியினருடன் கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு

In இந்தியா
Updated: 15:41 GMT, May 4, 2017 | Published: 06:58 GMT, May 4, 2017 |
0 Comments
1251
This post was written by : Shailu

உள்ளூராட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கூட்டணி தொடரும் என த.மா.கா. கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு த.மா.கா. மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் மேற்குறித்த அறிவிப்பை வெளிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் அறிவிக்கப்பட்ட கூட்டணியானது சுமுகமாக உள்ளதால், உள்ளூராட்சி தேர்தலிலும் அதே கூட்டணி தொடர்வதாக அவர் அறிவித்துள்ளார்

அத்தோடு விவசாயிகள் தற்கொலை தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் உள்ள தவறான தகவல்களை திரும்பப்பெற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் அத்துமீறல் தொடர்ந்து வருகிற நிலையில், இதனை தடுத்து, மீனவர்களுக்கு பாதுகாப்பினை அரசு உறுதிசெய்யவேண்டும் என்றும் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg