Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருந்துப் பொருளாக பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடா

In
Updated: 07:46 GMT, May 4, 2017 | Published: 07:44 GMT, May 4, 2017 |
0 Comments
1255
This post was written by : Elakkiya

பேக்கிங் சோடா, சமையலில் மட்டுமின்றி மருந்துப் பொருளாகவும், சுத்தம் செய்யும் பொருளாகவும் அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அகன்ற வாளி ஒன்றில் நீரை நிரப்பி அதில் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து பாதங்களை அதில் நன்கு ஊற வைத்து பின் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் பாதங்களில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்குவதோடு பாதங்களும் அழகாக இருக்கும்.

அதிகமாக வியர்வை வெளியேறும் பிரச்சினை இருப்பின் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து அக்குளில் ஸ்ப்ரே செய்து கொண்டால் வியர்வை அதிகமாக வெளியேறுவது தடுக்கப்படுவதோடு துர்நாற்றமும் நீங்கும்.

சுட்டெரிக்கும் வெயிலில் சருமம் பயங்கரமாக எரியும். அவ்வாறு இருக்கும்போது வாளி ஒன்றில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் அரை கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து அந்நீரில் அரை மணிநேரம் உட்காருங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க துணியால் உடலைத் துடைக்காமல் அப்படியே உலர விடுங்கள்.

ஷம்புவுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து தலைக்கு பயன்படுத்துங்கள். இதனால் தலைமுடி நன்கு பட்டுப் போன்று இருக்கும். தலைமுடி இன்னும் எண்ணெய் பசையுடன் இருந்தால், பேக்கிங் சோடா கலந்த நீரை தலைமுடியில் ஸ்ப்ரே செய்து பின்னர் சீப்பால் தலைமுடியை சீவுங்கள்.

கூர்மையான பொருட்களால் சருமத்தில் கீறல்கள் இருந்தால், பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து காயத்தின் மீது தடவ விரைவில் குணமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg