Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் தவான்-புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு

In கிாிக்கட்
Published: 08:23 GMT, May 4, 2017 |
0 Comments
1176
This post was written by : Anojkiyan
tuo

மினி உலகக்கிண்ணம் எனப்படும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் ஷிகார் தவான், புவனேஸ்வர் குமார், ஷர்திக் பாண்ட்யா மற்றும் பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி வருவதன் மூலம் குறித்த வாய்ப்பு கிட்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

சமீகாலமாக இடம்பெற்ற தொடர்களில் இடம்பெறாத தவான் மற்றும் புவனேஸ்வர் குமார் ஹைதராபாத் அணி சார்பில் சிறப்பாக விளையாடி அணிக்காக பல வெற்றிகளை தேடி கொடுத்துள்ளனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.எஸ்.ராகுல் காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் தவானுக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், இனிவரும் ஐ.பி.எல் போட்டிகளில் ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமென நம்பப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg