Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

படங்கள் பற்றிய விமர்சனம் குறித்து புதிய கருத்து வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்

In சினிமா
Published: 09:00 GMT, May 4, 2017 |
0 Comments
1335
This post was written by : Shailu
saravanan irukka bayamaen

இயக்குனர் எழிலின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.

ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே சூரி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், மன்சூர் அலிகான், வித்யூலேகா ராமன், ரோபோ சங்கர், உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள நிலையில், எதிர்வருகிற ஏப்ரல் 12ஆம் திகதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

அந்தவகையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

‘சரவணன் இருக்க பயமேன்’ படம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg