Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலனறுவை எல்லைக் கிராம மக்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பு

In இலங்கை
Updated: 11:22 GMT, May 4, 2017 | Published: 11:19 GMT, May 4, 2017 |
0 Comments
1226
This post was written by : Elakkiya

பொலனறுவை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான பள்ளித்திடல் மற்றும் பங்குறாணை கிராம மக்களுக்காக ஸ்ரீலங்கா ஹிறா அறக்கட்டளை மூலம் தலா 11 இலட்சம் ரூபா பெறுமதியான 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

யுத்த காலங்களின் போது, தமது வாழ்விடங்களை இழந்த மேற்படி கிராம மக்களுக்காக இவ்வாறு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஹிரா அறக்கட்டளைத் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

பள்ளித்திடல் மற்றும் பங்குறாணை கிராம மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க சகல அடிப்படை வசதிகளுடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் குடிநீர் வசதி, மலசல கூடம், வீதி மற்றும் பாலர் பாடசாலை என்பனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வீடுகளை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு கிராம மக்களின் ஏற்பாட்டில் விரைவில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg