Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவுடன் இணைவாரா மைத்திரி? – பேச்சுவார்த்தை தீவிரம்

In இலங்கை
Updated: 12:56 GMT, May 4, 2017 | Published: 11:11 GMT, May 4, 2017 |
0 Comments
1782
This post was written by : Varshini

அண்மைய மே தினக் கூட்டம் கொழும்பு அரசியலில் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில், அரச மற்றும் எதிர்த்தரப்பினருக்கிடையிலான இரகசிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரியையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைக்கும் வகையிலான குறித்த பேச்சுவார்த்தை, கொழும்பிலுள்ள பிரபல விடுதியொன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, அமைச்சர்களான சந்திம வீரக்கொடி, லசந்த அழகியவன்ன, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா மற்றும் மஹிந்த தரப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இச் சந்திப்பில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மே தினக் கூட்டத்தில் இரு பிரதான கட்சிகளை விட மஹிந்த தரப்பிற்கு அதிகளவு ஆதரவு கிடைக்கப்பெற்ற நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைத்து இரு பிரதான கட்சிகளும் செயற்பட்டு வரும் இச் சந்தர்ப்பத்தில், ஐ.தே.க.வை ஓரங்கட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை தனித்து நிரூபிப்பது குறித்து இச் சந்திப்பில் பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg