Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவிற்கு உயிர் அச்சுறுத்தல்!- பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு பொது எதிரணி கடும் எதிர்ப்பு

In இலங்கை
Updated: 03:41 GMT, May 5, 2017 | Published: 03:41 GMT, May 5, 2017 |
0 Comments
1294
This post was written by : Risha

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக சபாநாயகரிடம் சுட்டிக்காட்டி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திடீரென குறைக்கப்பட்டதற்கு மஹிந்த ஆதரவு அணியினர் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் நேற்று (வியாழக்கிழமை) கூடிய போதே இவ்வாறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதன்போது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, ‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு உயிர் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், மே தினம் முடிவடைந்த கையோடு திடீரென அவருக்கான பாதுகாப்புப் பிரிவிலுள்ள 45 பேர் கொண்ட பிரிவொன்றை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டவேளை, பொலிஸ், விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படும் என பிரதமரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. நிலைமை இப்படியிருக்கும்போது அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சபாநாயகரும், நாடாளுமன்றமும் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர், ‘இது தொடர்பில் எதிரணி உறுப்பினர்கள் மூவர் என்னிடம் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து இது குறித்த அறிவிப்பொன்றை விடுக்கமுடியும்’ என்றார்.

ஆனால், இதற்கு உடனடியாக தீர்வை அறிவிக்காது இழுத்தடிப்பதானது முன்னாள் ஜனாதிபதிக்கான உயிர் அச்சுறுத்தலை அதிகரிப்பதாகவே அமையும்’ என்று தினேஷ் குணவர்தன மீண்டும் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து இது குறித்து கருத்து வெளியிட்ட சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ‘முன்னாள் ஜனாதிபதிக்கு பொலிஸ், விசேட அதிரடிப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுவதை ஏற்கமுடியாது’ என்று குறிப்பிட்டார். இதனால் எதிரணி உறுப்பினர்கள் சீற்றமடைந்து கூச்சல் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg