Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானை பழி தீர்த்தது மேற்கிந்திய தீவுகள் அணி

In கிாிக்கட்
Updated: 06:12 GMT, May 5, 2017 | Published: 04:42 GMT, May 5, 2017 |
0 Comments
1202
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 106 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைப்படுத்தியதோடு கடந்த போட்டியில் பெற்ற தோல்விக்கும் பதிலடி கொடுத்துள்ளது.

பிரிஜ்டவுணில் கடந்த 30ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 312 ஓட்டங்களை பெற்றது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சேஸ் 131 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் அப்பாஸ் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் அமிர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 393 ஓட்டங்களை பெற்றது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக அசார் அலி 105 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் கேப்ரியல் 4 விக்கெட்டுகளையும், ஹோல்டர், பிஸ்சோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில், 81 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி, 268 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஓப் 90 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் யாசிர் ஷா 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதன்பின் 188 என்ற ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 81 ஓட்டங்களுக்கு நடையை கட்டியது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 106 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்சமாக சப்ராஸ் அஹமட் 23 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் கெப்ரீல் 5 விக்கெட்டுகளையும் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்ரியல் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg