Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொழும்பில் வாகன நெரிசலை சமாளிக்க இலகு ரயில் சேவை!

In இலங்கை
Updated: 05:20 GMT, May 5, 2017 | Published: 05:15 GMT, May 5, 2017 |
0 Comments
1165
This post was written by : Risha

கொழும்பு மாநகரில் ஏற்பட்டிருக்கும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இலகு ரயில் சேவை மற்றும் மாற்றுப்பாதைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக மாநகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி – பதில் நேரத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் தொடர்ந்து உரையாற்றிய அவர், “கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விசேடமாக, அரச அலுவல்கள் பத்தரமுல்லைக்கு மாற்றப்பட்டுள்ளதால் பத்தரமுல்லை முதல் கோட்டை வரையிலான வீதி கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையைத் தவிர்ப்பதற்காக நாங்கள் வீதி அபிவிருத்திப் பணிகளுடன் விசேட திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

கொழும்பில் அண்மையில் பரிசோதித்து பார்க்கப்பட்ட பேருந்துகளுக்கான புதுவழித்திட்டம் வெற்றியளித்துள்ளது. இதனைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

சகல மாற்றுப்பாதைகளையும் உருவாக்குவதுடன் பத்தரமுல்லை முதல் கோட்டை வரை இலகு ரயில் சேவையொன்றை விரைவில் ஆரம்பிக்கவும் தீர்மானித்துள்ளோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg