Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பஞ்சாப் அணியின் பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பினை தடுக்குமா பெங்களூர் அணி?

In கிாிக்கட்
Updated: 09:01 GMT, May 5, 2017 | Published: 05:59 GMT, May 5, 2017 |
0 Comments
1329
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல் தொடரின் 43ஆவது லீக் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) பெங்களூரில் நடைபெறும் இப்போட்டியில் பஞ்சாப் அணிக்கு கிளென் மேக்ஸ்வெலும் பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும் தலைமை தாங்கவுள்ளனர்.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை இந்த போட்டி அவ் அணிக்கு முக்கிய போட்டியாக கருதப்படுகின்றது. எஞ்சியுள்ள அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஓஃப் சுற்றுக்கு நுழையலாம் என்ற நிர்ப்பந்தத்தில் உள்ள பஞ்சாப் அணி இப்போட்டியின் வெற்றி கனியை ருசிக்க கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை பெங்களூர் அணி பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டதால் இப்போட்டியில் தனது பலத்தை நிரூபிக்க மாத்திரமே விளையாடும். இருந்த போதிலும் பஞ்சாப் அணி வெற்றிபெற கடுமையாக போராட வேண்டியிருக்கும் என விமர்சகர்கள் தொிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg